கரோனா வைரஸ்: மார்ச் மாதத்துக்குப் பிறகு தென்கொரியாவில் அதிகபட்ச தொற்று

தென்கொரியாவில் கடந்த மார்ச் மாதத்துக்குப் பிறகு அதிகபட்சமான கரோனா பரவலை அந்நாடு எதிர்க் கொண்டுள்ளது.

இதுகுறித்து தென்கொரிய நோய் தடுப்பு மையம் கூறும்போது, “ தென்கொரியாவில் புதன்கிழமைன்று சுமார் 297 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்துக்குப் பிறகு தென்கொரியாவில் அதிகபட்சமாக கரோனா தொற்று இம்மாதத்தில் ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக தினமும் மூன்று இலக்கங்களில் கரோனா தொற்று பதிவாகிக் கொண்டிருக்கிறது. தென்கொரியாவில் இதுவரை 16,058 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 306 பேர் பலியாகினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/34cnpHl
via

No comments:

Post a Comment