ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகம் சுகாதாரத் துறை தரப்பில், “ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 1,100 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களாகவே ஐக்கிய அரபு அமீரகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கவனமாக கடைப்பிடிக்காததன் காரணமாக தொற்று அதிகரித்து வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Sgl7j7
via
No comments:
Post a Comment