பும்ராவாக இருக்கட்டும் யாராக இருக்கட்டும் அதிரடி மூலம் நெருக்கடி கொடுக்க முடியும்: அசுர ஆட்டம் ஆடிய பென் ஸ்டோக்ஸ்

நேற்று அபுதாபியில் நடந்த ஐபிஎல் 2020-ன் 45வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயித்த 196 ரன்கள் வெற்றி இலக்கை பென் ஸ்டோக்ஸ் தனது 60 பந்து 107 ரன்களால் ஊதித்தள்ளினார். 18.2 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றி பெற அதன் பிளே ஆஃப் வாய்ப்பும் பிரகாசமடைந்ததோடு சிஎஸ்கே வெளியேற்றமும் நீக்கமற உறுதி செய்யப்பட்டது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா பொங்கி எழுந்தார். சூரியகுமார் யாதவ் (40), இஷான் கிஷன் (37), சவுரவ் திவாரி (34) ஆகியோருக்குப் பிறகு ஹர்திக் பாண்டியா 21 பந்துகளில் 2 பவுண்டரி 7 சிக்சருடன் 60ரன்கள் விளாச 13 ஒவர்கள் முடிவில் 101/6 என்று இருந்த மும்பை 7 ஓவர்களில் 94 ரன்களை விளாசி 195 ரன்களை எட்டியது. ஹர்திக் பாண்டியாவுக்கு நிறைய புல்டாஸ்கள் தானமாக வழங்கப்பட்டது. அதை அவர் ஏற்றுக் கொண்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/34sdUmR
via

No comments:

Post a Comment