அமெரிக்க வரலாற்றிலேயே முதல் முறையாக பெண் ஒருவர் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஃபெடரல் வங்கியின் முன்னாள் தலைவர் ஜேனட் ஏலன் (வயது 74) நிதியமைச்சராக நியமிக்க அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்தது.
அமெரிக்க நிதியமைச்சராக ஜேனட் ஏலனை நியமிப்பது தொடர்பாக செனட் அவையில் நேற்று நடந்த வாக்கெடுப்பில் ஆதரவாக 84 உறுப்பினர்களும், எதிராக 15 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதில் செனட் அவையில் தலைவராக இருக்கும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் நடத்திய வாக்கெடுப்பில் ஜேனட் ஏலன் நிதியமைச்சராக ஒப்புதல் அளிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39in6Nm
via
No comments:
Post a Comment