செப்டம்பரில் மீண்டும் ஐபிஎல்

கரோனா வைரஸ் தொற்றால் பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் மாதம் 18 அல்லது 19-ம் தேதியில் தொடங்க பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. எஞ்சியுள்ள 31 ஆட்டங்களை நடத்த 3 வார காலம் போதுமானதாக இருக்கும் என கருதப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி வரும் 2ம் தேதி இங்கிலாந்து புறப்பட்டுச் செல்கிறது. அங்கு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணி யுடனும் அதைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்திய அணி கலந்து கொள்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hTG0P6
via

No comments:

Post a Comment