புதுடெல்லி: ஆசிய ஜூனியர் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த இளம் வீராங்கனை தன்வி பத்ரி சாம்பியன் பட்டம் வென்றார். சீனாவின் செங்டு நகரில் நேற்று நடைபெற்ற ஆசிய 15 வயதுக்குட்பட்டோர் மகளிர் ஒற்றையர் பிரிவில் தன்வி பத்ரி, வியட்நாம் வீராங்கனை தி து ஹுயன் குயனுடன் மோதினார்.
இதில் தன்வி பத்ரி 22-20, 21-11 என்ற செட் கணக்கில் தி து ஹுயன் குயனை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். இதேபோல் 17 வயதுக்குட்பட்டோர் ஆடவர் பிரிவில் இந்திய வீரர் ஞான தத்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ph2FZq
via
No comments:
Post a Comment