ரஷ்யா - உக்ரைன் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செயற்கை உடல் உறுப்புகளை வடிவமைத்த 2 இந்தியர்கள்

லிவிவ்: ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரில் பாதிக்கப்பட்டு உடல் உறுப்புகளை இழந்த உக்ரைன் வாசிகளுக்கு செயற்கை உடல் உறுப்புக்களை வடிவமைத்துக் கொடுத்ததில் 2 இந்தியர்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

உக்ரைனின் லிவிவ் நகரில் ‘சூப்பர்ஹியூமன்ஸ் மையம்’ என்ற எலும்பியல் சிறப்பு மருத்துவமனை உள்ளது. போரினால் கை, கால்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகளை இழந்த போர் வீரர்கள் மற்றும் பொது மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து, உளவியல் ஆலோசனை வழங்கி, ‘ப்ராஸ்தெடிக்’ எனப்படும் செயற்கை உடல் உறுப்புக்களை பொருத்தி,அவர்களது வாழ்வை புனரமைக்கும் மருத்துவமனை இது. இந்த சூப்பர்ஹியூமன்ஸ் மையத்தில் இதுவரை 625 பேருக்கு 850செயற்கை கை, கால்கள் பொருத்தப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aVNnJUX
via

No comments:

Post a Comment