180 ரன்களை எப்படி எடுப்பது என்று தெரியவில்லை: வங்கதேச கேப்டன் ஷான்டோ புலம்பல்

குவாலியர்: குவாலியரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. 128 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 11.5 ஓவர்களிலேயே இலக்கை வெற்றிகரமாக எட்டியது. இதனால் 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. குவாலியர் போட்டியில் வங்கதேச அணி சீரான இடைவேளையில் விக்கெட்களை அந்த அணி பறிகொடுத்ததால் சராசரிக்கும் குறைவான இலக்கையே கொடுக்கமுடிந்தது. போட்டி முடிவடைந்ததும் வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ கூறியதாவது:

எங்கள் நாட்டில் 140 முதல் 150ரன்களை சேர்க்கக்கூடிய அளவிலான ஆடுகளத்தில்தான் விளையாடுகிறோம். இதனால் 180 ரன்களை எப்படி குவிப்பது என்பதுஎங்களுடைய பேட்ஸ்மேன்களுக்கு தெரியவில்லை. ஆடுகளத்தை மட்டுமே நான் குறைகூற விரும்பவில்லை. நாங்கள் நீண்ட காலமாக இந்த வடிவத்தில் சிறப்பாக செயல்படவில்லை, நான் எந்த ஒரு தனிப்பட்ட வீரரைப் பற்றியும் பேச விரும்பவில்லை. ஒரு குழுவாக நாங்கள்பேட்டிங்கில் சரியாக செயல்படவில்லை. எங்கள் ஸ்கோரை அணுகும் விதத்தில் ஆக்ரோஷம் இருக்கும், ஆனால் சில நேரங்களில் பந்துகளை சரியாக தேர்வு செய்துஅடிக்க வேண்டும். இதுபற்றி சிந்திப்போம், ஆனால் எங்கள் அணுகுமுறையை மாற்றுவதில் அவசரப்பட முடியாது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CJ6xb0n
via

No comments:

Post a Comment