அமெரிக்காவில் அடைக்கலம் கோரும் இந்தியர்கள் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது.
கடந்த 2021-ம் நிதியாண்டில் அமெரிக்க அரசிடம் 4,330 இந்தியர்கள் அடைக்கலம் கோரி விண்ணப்பம் செய்த நிலையில் 2023-ம் நிதியாண்டில் இது 41,330 ஆக, அதாவது 855 சதவீதம் (எட்டைரை மடங்குக்கு மேல்) உயர்ந்துள்ளதாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இவர்களில் ஏறக்குறைய பாதி பேர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது எப்படியாவது அமெரிக்காவில் குடியேற வேண்டும் என்ற இந்தியர்களின் தீராத ஆவலை காட்டுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/70UBoqe
via
No comments:
Post a Comment