ரஷ்யாவில் கரோனா பாதிப்பு 24 லட்சத்தை தாண்டியது

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,782 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ரஷ்ய சுகாதாரத் துறை தரப்பில், “ ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,782 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். முந்தன நாள் 27,403 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 24 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாஸ்கோவில் தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதற்கிடையே 19 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39JVHob
via

No comments:

Post a Comment