விளையாட்டாய் சில கதைகள்: டேபிள் டென்னிஸ் வளர்ந்த கதை

டேபிள் டென்னிஸை, டென்னிஸ் விளையாட்டின் தம்பி என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இரு விளையாட்டுகளுக்கும் இடையே ஒற்றுமை உள்ளது. டென்னிஸ் விளையாட்டு பிரபலமாகத் தொடங்கிய நேரத்தில், மழைக்காலத்தில் ஆடுவதற்கு ஏற்ற வகையில் உள் அரங்கில் அதேபோன்ற விளையாட்டு ஒன்றை உருவாக்கும் எண்ணம் விளையாட்டு ஆர்வலர்களுக்கு ஏற்பட்டது. இந்த ஆர்வத்தால் உருவாக்கப்பட்ட விளையாட்டுதான் டேபிள் டென்னிஸ். மைதா னத்தில் டென்னிஸ் போட்டியை ஆடுவதைப் போலவே மேஜையின் மீது டென்னிஸ் கோர்ட் அமைத்து இவ்விளையாட்டு ஆடப்படுகிறது. இதற்கு ‘பிங் பாங்’ என்ற மற்றொரு பெயரும் உண்டு.

1800-களில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெ.ஜேக்ஸ் அண்ட் சன் என்ற நிறுவனம் டேபிள் டென்னிஸ் விளையாட்டை கண்டு பிடித்ததாக சொல்லப்பட்டாலும், 1887-ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த பார்க்கர் என்பவரும், 1890-ம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த டேவிட் ஃபாஸ்டர் என்பவரும் இவ்விளையாட்டை படிப்படியாக வளர்த்து, இதற்கென்று விதிகளை உருவாக்கியுள்ளனர். ஆரம்பத்தில் ரப்பர் பந்துகளைக் கொண்டு டேபிள் டென்னிஸ் விளையாடப்பட்டது. ஆனால் இந்தப் பந்துகள் மேஜையின் மீது பட்டு அதிக உயரத்துக்கு எழும்பியதால் வீரர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. அதன் பிறகு கார்க் பந்துகளை வைத்து டேபிள் டென்னிஸ் ஆடியுள்ளனர். ஆனால் அவை மேஜையில் பட்டு எழும்பவே இல்லை. இதைத்தொடர்ந்து செல்லுலாய்ட் பந்துகளை அக்காலத்தில் பயன்படுத்தினர். டேபிள் டென்னிஸ் விளையாட்டு ஓரளவு புகழ்பெற்ற நிலையில், 1901-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி, முதலாவது சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டி லண்டனில் உள்ள ராயல் அக்யூரியம் அரங்கில் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mar2CU
via

No comments:

Post a Comment