ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்: கன்கஸன் விதிமுறையால் ரவிந்திர ஜடேஜா இடம்பெற வாய்ப்பில்லை

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வரும் 17-ம் தேதி தொடங்கும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் ரவிந்திர ஜடேஜா விளையாடுவதற்கு வாய்ப்பில்லை என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியின்போது, ஜடேஜாவுக்குத் தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் மிட்ஷெல் ஸ்டார்க் வீசிய பந்து ஜடேஜாவின் ஹெல்மெட்டில் பட்டுக் காயம் ஏற்பட்டது. இதனால், கன்கஸன் முறையில் ஜடேஜா களமிறங்காமல் அவருக்குப் பதிலாக யஜுவேந்திர சாஹல் களமிறங்கினார். அந்தப் போட்டியில் இந்திய அணி வென்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2VTDpss
via

No comments:

Post a Comment