வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர்.
வேட்பாளர்களின் சொத்து விவரங்களை அமெரிக்க தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது. அதன்படி ரியல் எஸ்டேட் முதல் கிரிப்டோகரன்ஸி வரையில் பல தளங்களில் டிரம்ப் முதலீடு செய்துள்ளார். அவர் வசமுள்ள கிரிப்டோகரன்ஸியின் மதிப்பு 10 லட்சம் டாலர் (ரூ.8.4 கோடி) ஆகும். அதேபோல், பைபிள் விற்பனை மூலம் 3 லட்சம் டாலர் (ரூ.2.5 கோடி) வருவாய் ஈட்டியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8a20J6b
via
No comments:
Post a Comment