வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை பெற்றுள்ளார். இதுவரை அவர் 10 மாகாணங்களை வசப்படுத்தி உள்ளார். மேலும் 8 மாகாணங்களில் அவர் முன்னிலை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் வேட்பாளரும், தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிஸ் 8 மாகாணங்களை வசப்படுத்தி உள்ளார். எலெக்டோரல் காலேஜ் (வாக்காளர் குழு) பொறுத்தவரையில் ட்ரம்ப முன்னிலை பெற்றுள்ளார். அவருக்கு இதுவரை 154 வாக்காளர் குழு ஆதரவு கிடைத்துள்ளது. கமலா ஹாரிஸ் 81 பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ‘எலக்டோரல் காலேஜ்' (வாக்காளர் குழு) நடைமுறை பின்பற்றப்படுகிறது. அந்த நாட்டில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. அந்தந்த மாகாணங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப வாக்காளர் குழு உறுப்பினர்கள் இருப்பார்கள்.சிறிய மாகாணங்களில் 1 முதல் பெரிய மாகாணமான கலிபோர்னியாவில் 55 வரை வாக்காளர்கள் குழு உறுப்பினர்கள் உள்ளனர். ஒட்டுமொத்தமாக 538 வாக்காளர்கள் குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் குறைந்தது 270 உறுப்பினர்களின் ஆதரவை பெறும் வேட்பாளர், அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியும். அந்த வகையில், தற்போதைய நிலவரப்படி, ட்ரம்ப் 154, கமலா ஹாரிஸ் 81 என்ற எண்ணிக்கையை வசப்படுத்தி உள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MSXn0Bh
via
No comments:
Post a Comment