டி20 தொடரை வென்றது நியூஸி; பவுண்டரி, சிக்ஸர் மூலம் 88 ரன்கள் சேர்த்து சதம் அடித்த பிலிப்ஸ்: மே.இ.தீவுகளை நசுக்கி புதிய சாதனை

பிலிப்ஸின் காட்டடி சதம், கான்வேயின் அதிரடி அரை சதம் ஆகியவற்றால் மவுன்ட் மவுங்கானியில் இன்று நடந்த மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி வென்றது.

முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் சேர்த்தது. 239 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மே.இ.தீவுகள் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் மட்டுமே சேர்த்து 72 ரன்களில் தோல்வி அடைந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3lk3c7p
via

No comments:

Post a Comment