வங்கதேசத்தில் மாணவர்கள் மீண்டும் போராட்டம்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜினாமா

டாக்கா: வங்கதேசத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், அந்நாட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மூத்த நீதிபதிகள் பதவி விலக வேண்டும் என கோஷமிட்டனர். இதையடுத்து தலைமை நீதிபதி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

வங்கதேசத்தில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீத இட ஒதுக்கீட்டை மீண்டும் அளிக்க வேண்டும் என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இது வன்முறையாக மாறியதில் 450-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பிரதமரின் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால், ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SI9TbGc
via

No comments:

Post a Comment