உயிர் காக்கும் மருந்துக்கு பற்றாக்குறை: பாகிஸ்தானில் டிப்தீரியா நோய்க்கு 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு

கராச்சி: டிப்தீரியா எனும் கொடிய நோய் ‘காரிணி பாக்டீரியம் டிப்தீரியே' என்ற வகை பாக்டீரியாக்களால் பரவுகிறது.

இந்தக் கிருமிகள் தொண்டையை பாதித்து சுவாசத்தையும் உணவு விழுங்குவதையும் தடுப்பதால் இது தொண்டை அடைப்பான் என அழைக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு இந்த பாக்டீரியா தொற்று எளிதில் ஏற்படும். பெரும்பாலும் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளையும் வயதானவர்களையும் இது பாதிக்கும். டிப்தீரியாவை குணப்படுத்த ‘டிப்தீரியா ஆன்ட்டி-டாக்சின்' எனும் உயிர்காக்கும் மருந்து பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் இந்த மருந்து பற்றாக்குறை காரணமாக பாகிஸ்தானின் கராச்சி நகரில் இந்த ஆண்டு 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததாக ஜியோ நியூஸ் தெரிவிக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/a8f5bSe
via

No comments:

Post a Comment